Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

பல்துறைசார் போசாக்கக்கான நிகழ்ச்சித் திட்டம் - 2017 அதிபர் மற்றும் ஆசிரியருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு

14.11.2017 ம் திகதி காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்;டபத்தில்   பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர் தலைமையில் இடம் பெற்ற பல்துறை சார் போசாக்குக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் ஏற்பாடுசெய்யப்பட்ட விழிப்பூட்டல் கருத்தரங்கில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில், காத்தான்குடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி Dr.UL.நஸீர்தீன் மற்றும் வேல்ட்விசன் லங்கா நிறுவனத்தின் போசாக்கிற்கான ஒருங்கிணைப்பாளர்  P. லோகிதராஜா ஆகியோர்; வளவாளர்களாகக் கலந்;து கொண்டனர்.

2015 ஆம் ஆண்டு முதல் சனாதிபதி செயலகத்தின் கீழ்ச் செயற்படும் தேசிய போசாக்கு செயலகத்தின் பணிப்புரைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு மந்தபோசாக்கைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்களின் தொடரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதில் பாடசாலையில் கல்விபயிலும் வயதினைக்கொண்டவர்கள் தொடர்பாகவும் அவர்களது ஆரோக்கியம் மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும்ஈ அவர்களமு உடற்திணிவுச் சுட்டியின் நிலையைக் கண்காணித்தல் தொடர்பாகவும்,மாணவர்களுக்கான கை கழுவுதல் மற்றும் மலசம கூட வசதிகள் பற்றியும் பல தகவல்கள் பகிரப்பட்டதுடன், பல்வேறு நோய்களிலிருந்து காத்துக்கொள்வது தொடர்பான வழிமுறைகளும் விளக்கப்பட்டன.  

 

கலைமன்ற கலைஞர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு

காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன், பிரதேச கலைஞர்களை மையப்படுத்தி எமது பிரதேசத்தின் ' கலைகளைப் பாதுகாப்போம் ' என்ற தொனியில் வாண்மை விருத்தி செயலமர்வு ஒன்று 25.09.2017 திங்கக் கிழமை காலை 9.00 மணி முதல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் எமதூரின் மூத்த இலக்கியவாதிகள் மற்றும் கலைப் படைப்பாளர்களினால் இளம் சமூகத்துக்கு பின்வரும் தலைப்புக்களில் கருத்தாடல்கள் வழங்கப்பட்டது.

தற்கால சமூக நாவல்கள், சிறுகதைகள், மற்றும் கலைப் படைப்புகள் - அக்கால சமூக நாவல்கள்;, சிறுகதைகள், மற்றும் கலைப் படைப்புகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது.
-ஜூனைதா ஷரீப்-
பாரம்பரிய கலைகளின் மறைதலுக்குக் காரணம் வளர்ப்பதற்கு கலைஞர் இல்லாமையா அல்லது மக்களின் மனமாற்றமா?
-கவிஞர் சாந்தி முகைதீன்-
பண்டைக்கால ஊடக முறைமைகளைவிட இக்கால நவீன ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களும்.
-கவிஞர் TL. ஜௌபர்கான்-
சிறுகதைகளில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறுகதைகளை  புனைவது எவ்வாறு?
-காத்தான்குடி பாத்திமா-
கலைப்படைப்புகள் ஊடாக இஸ்லாத்தை வளர்போம்
-கவிஞர் MHM. புகாரி-
கிழக்கில் மறைக்கப்படும் இஸ்லாமிய கலை வரலாறுகளும் அவற்றை முன்னெடுக்கும் வழிமுறைகளும்.
அல்ஹாஜ் MMM. மஹ்ரூப் கரீம்




 

சுனாமி ஒத்திகை

காத்தான்குடி பிரதேச செயலக 167C (புதிய காத்தான்குடி- 03) கிராம உத்தியோகத்தபிரிவில் சுனாமி ஒத்திகை 05.11.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.02.00மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு காத்தான்குடி பிரதேச செயலக உ.உதயஸ்ரீதர் அவர்கள் தலைமை தாங்கியதுடன் உதவிப்பிரதேச செயலாளர்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர்,கிராம உத்தயோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரகள்;,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவம்,பொலிஸ்,மின் அத்தியாட்சகர் மற்றும் சமூக மட்ட நிறுவனங்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன் ஒத்துழைப்புக்களையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
பிரதச செயலாளர்

U. Uthayasrither (SLAS)

065-2246591

News and Events
Who is Online
We have 89 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
December 2017
S M T W T F S
26 27 28 29 30 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6
Annual Report 2015

anual

Content View Hits : 100983