Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினம் / சிப்தொற புலமைப்பரிசில்

womenபிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவு, சர்வதேச மகளிர் தின நிகழ்வை 08-03-2016ம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் SH. முஸம்மில் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக ACA.அப்கர் (உதவிப்பிரதேச செயலாளர்),
DDP மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். மகளிர் தின சிறப்புரையை றிஸ்வான் மதனி (கலாசார உத்தியோகத்தர்) நடத்தினார். மற்றும் உயர்தர மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

Read more...

 

பன்னிரண்டு மாத விளக்கு சித்திரம் வரைதல்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறுவர்களுக்கு ஓவியம் வரைதல் நிகழ்வு இடம்பெற்றது. 01-03-2016 ம் திகதி நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், மொபிடல் நிறுவன பிராந்திய முகாமையாளர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். அன்வர் நகர் முன்பள்ளி பாடசாலை, எலைட் முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். பரிசில்களை மொபிடல் நிறுவனமும், சிற்றுண்டிகளை சர்வோதய நிறுவனமும் வழங்கி வைத்தன. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் MCM.றிஸ்வான் அவர்களின் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர், கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கரையோர வளங்கள் மற்றும் பாதுகாப்பு

costal1கரையோர வளங்கள் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தினால் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய தரம் 09 மற்றும் 10 இல் கல்வி கற்கும் 20 மாணவர்களக்கு தங்கள் சமூகத்தை விழிப்புணர்வு ஊட்டி கரையோர வளங்களை பாதுகாத்தல் எனும் நோக்கில் விளிப்புட்டல் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கரையோர வளங்கள் எவை? அதன் பயன்கள் என்ன? அவை எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவை? என்பன மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடி பிரதேசம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவை என மாணவர்களுடாக கண்டறியப்பட்டு அதற்கான தீர்வும் அவர்களுடாகவே கண்டறியப்பட்டது. மேலும், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிகள் எவை, கரையோர வளத்தைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் உள்ள சட்டங்கள் எவை என்பன பற்றியும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக G. McGILL (Coast Conservation & Coastal Resource Management) கலந்து கொண்டார்

Read more...

 
DSKApps e-Gov.Initiative

Dskapps

Dskapps

News and Events
Who is Online
We have 125 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
October 2017
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4
Annual Report 2015

anual

Content View Hits : 96655