Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினம் / சிப்தொற புலமைப்பரிசில்

பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்திப் பிரிவு சர்வதேச மகளிர் தின நிகழ்வை 08/03/2016 ம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் SH. முஸம்மில் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக ACA. அப்கர் (உதவிப் பிரதேச செயலாளர்) DDP மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். மகளிர் தின சிறப்புரையை றிஸ்வான் மதனி (கலாசார உத்தியோகத்தர்) நடாத்தினார். மற்றும் உயர்தர மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான மீளாய்வு செய்தல்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கும் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் கடந்த 18/02/2016 ம் திகதி காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏற்கனவே 3 நாள் பயிற்றுவிக்கப்பட்ட 30 பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை நடாத்தினார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பிரதேச மட்ட டெங்கு ஒழிப்பு குழுக்கூட்டம்

பிரதேச மட்ட டெங்கு ஒழிப்பு குழுக்கூட்டம் 28-03-2016 அன்று திங்கட்கிழமை பி.ப. 2.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், திவிநெகும முகாமையாளர், நகரசபை செயலாளர், பொலிஸ் நிலைய SI, MOH இல் இருந்து SPHI, ஆதார வைத்தியசாலையின் MS, கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் மார்ச்29 – ஏப்ரல் 04ம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதை தெரிவித்ததுடன் அவ்வாரத்தில் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 
DSKApps e-Gov.Initiative

Dskapps

Dskapps

News and Events
Who is Online
We have 13 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
June 2017
S M T W T F S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1
Annual Report 2015

anual

Content View Hits : 85668