Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

உளவள ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

உளவள ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வ நிகழ்ச்சி உதவிப்பிரதேச செயலாளரின் தலைமையில் 05.05.2016 காலை 9.00 மணியளவில் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வளவாளர்களாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மனநல வைத்தியர் Dr.  சுசீகலா பரமகுருநாதன் அவர்களும், சாய்ந்தமருது பிரதேச செயலக உளவள உத்தியோகத்தர் L.T.M. இயாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நெருக்கீட்டு முகாமைத்துவம் என்ற தலைப்பில் Dr.  சுசீகலா பரமகுருநாதன் அவர்களும், உளவளத்துணை அறிமுகம் குழந்தை வளர்ப்பு நுட்பங்களும் என்ற தலைப்பில் L.T.M. இயாஸ் அவர்களும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் இணக்கசபை உறுப்பினர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பொருளாதார அபிவிரு்த்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என 100 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

 

பிரதேச இலக்கியப் போட்டித் தொடர் - 2016

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை இலக்கியப் போட்டித் தொடர் இவ்வருடம் பிரதேச மட்டத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் எதிர்வரும் 30ஃ05ஃ2016 ம் திகதிக்கு முன்னர் தமது ஆக்கங்களை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பு :- விண்ணப்பப் படிவமும் சுற்று நிருபமும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவில் பெற்றுக் கொள்ள முடியும். பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காத்தான்குடி.

 

டெங்கு வாரத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு

 

டெங்கு வாரத்தை முன்னிட்டு 167 கிராம உத்தியோகத்தர் பிரிவினால் 01.04.2016 ம் திகதி 7.30 மணிக்கு வாவிக்கரை வீதி அஷ்-ஷுஹதா வீதி ஸைறுலாப்தீன் ஹாஜியார் ஒழுங்கை போன்ற வீதிகளில் சரமதானம் மேற்கொள்ளப்பட்டதோடு தத்தமது வீட்டு வளாகங்களும் மக்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் M. றஊப், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் M. அஜீஸா, வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் MSM. நுர்தீன், RDS, WRDS உறுப்பினர்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள் , விளையாட்டு கழக உறுப்பிளர்கள் போன்றவர்கள் பங்குபற்றினர்.

Read more...

 
DSKApps e-Gov.Initiative

Dskapps

Dskapps

News and Events
Who is Online
We have 55 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
August 2017
S M T W T F S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2
Annual Report 2015

anual

Content View Hits : 90411