Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு

நுன்கடன் மீள் எழுச்சி திட்டத்தின்கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 162பீ 164ஏ 164பீ கிராம சேவகர் பிரிவில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (01) காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக பன்னிரெண்டு நபர்களுக்கு 285000.00 பணம் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள். திவிநெகும உத்தியோகத்தர்கள். பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

 

82 குடும்¬பங்¬க¬ளுக்கு இல¬வச சீமெந்து விநி-யோகம்

காத்தான்குடி பிர­தேச செய­லகப் பிரிவில் 246 குடும்­பங்­க­ளுக்கு தலா 10 பைக்கற் சீமெந்து இல­வ­ச­மாக வழங்­கப்பட்டது.

முதலாம் கட்­ட­மாக 82 குடும்­பங்­க­ளுக்கு நேற்று (01) புதன்கிழமை பிர­தேச செய­லக வளவில் வைத்து பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது .

மட்டு.மாவட்ட வீட­மைப்பு அதி­கார சபை மட்டு.மாவட்­டத்­தி­லுள்ள வறுமைக் கோட்­டிற்கு உட்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு குடும்பம் ஒன்­றுக்கு பத்து சீமெந்து பைக்­கற்­று­களை வீடு திருத்த­­வேலை செய்­வ­தற்கு வழங்கி வரு­கின்­றது.

வறு­மைக்­கோட்­டிற்கு உட்­பட்ட குடும்­பங்கள் தமது வீடு­களின் சுவர் பூச்சு வேலை மற்றும் திருத்த வேலை­களை மேற்­கொள்­வ­தற்கு வழங்­கப்­பட்­டு­வரும் சீமெந்து மூன்று கட்­டங்­க­ளாக பிர­தேச செய­லகங்­க­ளூ­டாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போது முதலாம் கட்ட விநி­யோகம் காத்தான்குடி பிர­தேச செய­லகப் பிரிவில் நடை­பெற்று வரு­கின்­ற­மை குறிப்பிடத்தக்கது

 

காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவு விளையாட்டு விழாவில் காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகம் 34 புள்ளிகளைப் பெற்று 2016ம் ஆண்டுக்கான காத்தான்குடி பிரதேச சம்பியன் கழகமாக தெரிவு

sportsகாத்தான்குடி பிரதேச செயலப்பிரிவு விளையாட்டு விழாவில் காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகம் 34 புள்ளிகளைப் பெற்று 2016ம் ஆண்டுக்கான காத்தான்குடி பிரதேச சம்பியன் கழகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவுக்கான விளையாட்டு விழா 13.5.2016 அன்று காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்றது.
இந்த விளையாட்டு விழாவில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பாயிஸ், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.கோமலேஸ்வரன் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எம்.ஜெலீல் உட்பட அதிகாரிகள் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விளiயாட்டு விழாவில் காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகம் 34 புள்ளிகளைப் பெற்று 2016ம் ஆண்டுக்கான காத்தான்குடி பிரதேச சம்பியன் கழகமாக தெரிவு செய்யப்பட்டு முதுலாமிடத்தை பெற்றதுடன் காத்தான்குடி குளோபல் விளையாட்டுக்கழகம் 27 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் 17 புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

Read more...

 
DSKApps e-Gov.Initiative

Dskapps

Dskapps

News and Events
Who is Online
We have 39 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
August 2017
S M T W T F S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2
Annual Report 2015

anual

Content View Hits : 90409